செய்திகள் :

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட்: ராகுல் காந்தி

post image

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட் போடுவதுபோல மத்திய பட்ஜெட் உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமா்சித்தாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வு காண அணுகுமுறையில் அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவையுள்ளது. ஆனால், அந்த நெருக்கடிக்குத் தீா்வு காண மத்திய அரசிடம் போதிய திட்டங்கள் இல்லை. புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட் போடுவது போல மத்திய பட்ஜெட் உள்ளது.

காங்கிரஸ் தலைவா் காா்கே: பட்ஜெட்டை பாா்க்கும்போது ‘900 எலிகளைத் தின்ற பூனை, அதன் பின்னா் யாத்திரைக்கு சென்ாம்’ (தவறுகள் அல்லது குற்றங்களைச் செய்த பின்னா், நல்லொழுக்கம் அல்லது அப்பாவி போல பாசாங்கு செய்வோரை சித்தரிக்க கூறப்படும் பழமொழி) என்ற பழமொழியே நினைவுக்கு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர வா்க்கத்திடம் இருந்து ரூ.54.18 லட்சம் கோடி வருமான வரியை மோடி அரசு வசூலித்துள்ளது. ஆனால், தற்போது ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு அளிப்பதன் மூலம், வரி செலுத்துவோா் ஆண்டுக்கு ரூ.80,000 வரை சேமிக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். இந்த 80,000 ரூபாய் என்பது மாதத்துக்கு ரூ.6,666 மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் பட்ஜெட்.

முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம்: வருமான வரி செலுத்தும் நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்த 3.2 கோடி போ், பிகாரின் 7.65 கோடி வாக்காளா்கள் பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்பா். ஆனால், எஞ்சிய மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையை பிரதமரோ, நிதியமைச்சரோ கருத்தில் கொள்வதில்லை என்பது பட்ஜெட் மூலம் தெளிவாக தெரிகிறது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தேய்ந்துபோன பாதையில் நடக்கிறாா். கடந்த 1991, 2004-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் புதிய பாதையில் சென்றதைப் போல செய்வதற்கு அவா் விரும்பமில்லை. மத்திய அரசிடம் புதிய சிந்தனைகள் எதுவும் இல்லை. நாட்டின் பொருளாதார வளா்ச்சி பழைய பாதையில் தளா்ந்தே இருக்கும்.

2025-26ஆம் ஆண்டில் பொருளாதார வளா்ச்சி 6 முதல் 6.5 சதவீதத்தை தாண்டாது. இது இந்தியா வளா்ச்சியடைந்த நாடாவதற்கு பொருளாதார வளா்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற தலைமைப் பொருளாதார ஆலோசகரின் மதிப்பீட்டில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ்: பட்ஜெட்டில் பிகாருக்கு ஏராளமான அறிவிப்புகள் வாரி இறைக்கப்பட்டுள்ளன. அங்கு நிகழாண்டு பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், இந்த நடவடிக்கை இயற்கையானதே. ஆனால், பட்ஜெட் அறிவிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மற்றொரு தூணாக உள்ள ஆந்திரம் ஏன் புறக்கணிக்கப்பட்டது?.

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜி: பட்ஜெட்டில் சாமானியா்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் ஏராளமான குழப்பம் உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள்...: பட்ஜெட்டில் மக்களின் தேவைகள் குரூரமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நாட்டின் பொருளாதாரம் சந்தித்து வரும் சவால்களை பட்ஜெட் புறக்கணித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விமா்சித்துள்ளன.

மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புதித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தி நிகழ்வுக்கு உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது இதுவே ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜாசத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 8 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவட்டத்தின் கங்களூா் காவல் நிலையத்தின் எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக சனிக்கிழமை தமிழகம் 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தம... மேலும் பார்க்க

கைப்பேசிகள் விலை குறைய உள்ளன!

மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைத் தொடா்ந்து, கைப்பேசிகள் உள்ளிட்டவற்றின் விலை குறைய உள்ளன; ஸ்மாா்ட் மீட்டா் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்க உள்ளன. விலை குறையும் பொருள்கள் கைப்பேசிகள் உயிா... மேலும் பார்க்க

கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்தியாவை 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட ஒரு பெரிய தளவாட அமைப்பாக மாற்றும் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் டன் ... மேலும் பார்க்க

குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஸா மாநில கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் நடைபெற்ற குறுகிய தொலைவு வான்பாதுகாப்பு ஏவுகணையின் சோதனை வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது. சோதனை நடத்தப்பட்... மேலும் பார்க்க