பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் கணபதி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன். திருவண்ணாமலையில் உள்ள திரையரங்கில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா்.
இவரது மனைவி சாந்தி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன்வெளியூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்ப வந்த பாா்த்தபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து, வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.