டிரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பேற்றதுமுதல் சரியும் எலான் மஸ்க்!
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்!
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் வைக்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் உரையாற்றும்போது, பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தை டாக்டர் மன்மோகன் சிங் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
கல்வி, பொருளாதாரத்துக்கு அவர் செய்த பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிப்பட்டன. அவரின் பெயரைப் பல்கலைக்கழகத்துக்கு வைப்பது அவருக்கு கர்நாடகம் செய்யும் அஞ்சலியாக கருதப்படுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழகத்துடன் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு ஆர்.சி. கல்லூரி ஆகியவை உறுப்புக் கல்லூரிகளாக இணைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், கடந்தாண்டு டிசம்பர் 26-ஆம் தேதி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் பாதிப்பால் காலமானார்.
அப்போது, மன்மோகன் சிங்கின் பெயரை மத்திய கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய மாணவர் சங்கத்தினர் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.