செய்திகள் :

பெண்களுக்கு எதிரான குற்றம்: ``ஜாமினில் வெளிவரமுடியாத தண்டனை'' - சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!

post image

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தொடரில் பெண்களுக்கு எதிரானக் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2025 குற்றவியல் திருத்தச் சட்ட முன்முடிவை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிமுகம் செய்து உரையாற்றினார். அப்போது, ``பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறது இந்த திராவிட மாடல் அரசு. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.

ஸ்டாலின்

இத்தகையக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட நினைப்பவருக்கு கடுமையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில், பி.என்.எஸ் சட்டத்தின் கீழும், நம் மாநில அரசின் சட்டத்தின் கீழும் ஏற்கெனவே இத்தகையக் குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இந்த தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது." என்றார்.

அதைத் தொடர்ந்து பி.என்.எஸ் - மாநில சட்டத் திருத்தங்கள் அடிப்படையில் தமிழ்நாடு 1998 பெண்ணுக்கு துன்பம் விளைவித்தல் தடை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

என்ன சொல்கிறது மசோதா:

2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், தமிழ்நாடு திருத்தச் சட்டம் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களை கடுமையாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

* பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள்காலம் வரை கடுங்காவல் தண்டனையும் வழங்கப்படும்.

சிறை

* பெண்ணை பின்தொடர்ந்தால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 5 ஆண்டு சிறை.

* குறிப்பிட்ட சில இடங்களில் குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை.

* மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை.

* ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களில் ஈடுபடால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை.

மூன்றே நாளில் வழுக்கைத் தலை... அதிர்ச்சியில் கிராம மக்கள்; முடியுதிர்வுக்கு காரணம் என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் சில நபர்களுக்கு திடீரென கொத்துகொத்தாக முடி உதிர்ந்து வலுக்கை விழுந்ததால் கிராமவாசிகள் பீதியடைந்துள்ளனர். நீர் மாசுபாடு காரணமாக இத்தகைய பா... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு' த.பெ.தி.க - நா.த.க இடையே மோதல்... போலீஸார் காயம்..!

கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று முன் தினம் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு, `பெரி... மேலும் பார்க்க

Doctor Vikatan: நட்ஸ் சாப்பிட்டால் நல்ல கொழுப்பு அதிகரிக்குமா...?

Doctor Vikatan: நட்ஸ் சாப்பிட்டால் உடலில் நல்ல கொழுப்பின்அளவு அதிகரிக்குமா... பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிட வேண்டுமா, தோல் நீக்கி சாப்பிடுவது சரியா? இதய நலனைப் பாதுகாக்க எண்ணெய் பயன்பாட்டை அறவே தவிர்... மேலும் பார்க்க

Food & Health: காய்ச்சல் இருக்கும்போது சாப்பிட வேண்டிய உணவுகள்!

காய்ச்சல் வந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். மருந்துகள் கொடுப்பதால் மட்டுமே காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்திவிட முடியாது. ‘காய்ச்சல் குணமாவதற்குத்தான் மருந்து சாப்பிட்டுவிட்டோ... மேலும் பார்க்க

TN Assembly: `அண்ணா பல்கலை. மாணவி வழக்கு' - கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வரின் ஆவேச உரை!

2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி 3-வது நாளாக நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

Canada: ``டிரம்பின் அச்சுறுத்தலுக்கு கனடா பின்வாங்காது'' - ஜஸ்டின் ட்ருடோ சொல்ல காரணம் என்ன?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் நேற்று அறிவித்திருந்தார். அதைத் ... மேலும் பார்க்க