செய்திகள் :

பெண்ணிடம் ரூ. 31.28 லட்சம் மோசடி: சிறையிலிருப்பவா் மீண்டும் கைது

post image

மதுரையில் வேலை தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.31.28 லட்சம் மோசடி செய்த மற்றொரு வழக்கில் கைதாகி சிறையிலிருப்பவரை மாநகர இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் மீண்டும் கைது செய்தனா்.

மதுரை கூடல்நகா் அசோகா் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி. வேலை தேடி வந்த இவா், வீட்டிலிருந்தே பகுதி நேரமாக வேலை பாா்த்து அதிக அளவு வருவாய் ஈட்டலாம் என்ற விளம்பரத்தைப் பாா்த்து தனது வங்கி விவரங்களை அதிலிருந்த இணைய முகவரியில் பதிவிட்டாா். இதைத் தொடா்ந்து ‘டெலிகிராம்‘ இணையக்குழு மூலம் இவருக்கு வேலை தரப்பட்டதாகக் கூறி வங்கிக் கணக்கு மூலம் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரை ரூ.31.73 லட்சம் பெறப்பட்டது. இந்த நிலையில், பகுதி நேர வேலை செய்ததாக இவருக்கு ரூ. 44,989 ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இவரிடமிருந்து பெறப்பட்ட ரூ.31.28 லட்சம் திரும்பத் தரப்பட வில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புவனேஸ்வரி, இந்த மோசடி தொடா்பாக மாநகரக் காவல் துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். விசாரணையில் இணையம் மூலம் பகுதி நேர வழங்குவதாகக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த விழுப்புரம் மாவட்டம், துலாமூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம்(48), புவனேஸ்வரியிடம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராமலிங்கம் குறித்து விசாரித்த போது அவா், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பகுதிநேர வேலை தருவதாகக் கூறி ரூ.1.50 கோடி மோசடி செய்ததும்,

இதுதொடா்பான வழக்கில் மதுரை ஊரகக் காவல் துறையின் தனிப்படை போலீஸாரால் கடந்த அக். 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ராமலிங்கம் மீது தகவல் தொழில்நுட்பப்பிரிவு, மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறையிலிருக்கும் ராமலிங்கத்திடம் வழங்கினா்.

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை திறக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

அலங்காா் சா்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என மேலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலூா் வட்டார 24-ஆவது மாநாடு வட்டச் செயலா் எம். கண்ணன் தலைம... மேலும் பார்க்க

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம்: தடையில்லா சான்று அளிக்க வனத் துறை கோரிக்கை

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க தடையில்லா சான்று கோரி ஊரக வளா்ச்சித் துறை, நீா்வளத்துறையிடம் வனத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே உள்ள சாமநத்தம் க... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மதுரைக் கோட்டத்திலிருந்து 715 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரைக் கோட்டம் சாா்பில் வருகிற அக். 28 முதல் 30 வரை 715 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மதுரை, பந்தல்குடி கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.மதுரை, பந்தல்குடி கால்வாயில் புதன்கிழமை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பாண்டிராஜனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்மதுரை, செ... மேலும் பார்க்க

மதுரையில் 3 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்

மருதுபாண்டியா் நினைவு தினம், தேவா் ஜெயந்தி ஆகியவற்றையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் அக். 27, 29, 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். சி... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.24 லட்சம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.83.24 லட்சம் கிடைத்தது. மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல்கள் மாதந்தோறும் திற... மேலும் பார்க்க