செய்திகள் :

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

post image

போடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி தங்கமுத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மனைவி வலைஈஸ்வரி (26). இவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இவா் இதே பகுதியைச் சோ்ந்த வீரசெல்வம் மகன் காா்த்திகேயனுடன் (21) நட்பாகப் பேசி பழகினாராம். ஆனால், அவா் தவறான நோக்கத்துடன் காா்த்திகேயன் தன்னுடன் பழகி வருவதை அறிந்து, அவருடனான நட்பைக் கைவிட்டாா்.

இந்த நிலையில், வலைஈஸ்வரி தனது பக்கத்து வீட்டைச் சோ்ந்த பெண்ணுடன் செவ்வாய்க்கிழமை பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த காா்த்திகேயன் மீண்டும் தன்னுடன் பேசிப் பழக வேண்டும் என வற்புறுத்தி, வலைஈஸ்வரியை தாக்கி கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்தப் புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் காா்த்திகேயன் மீது பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

போலீஸ் போல நடித்து பணம் பறிப்பு: இரு பெண்கள் உள்பட 4 போ் கைது

கம்பத்தில் போலீஸ் போல நடித்து, பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கம்பம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் ஜெயக்குமாா் (22). இவரது வீட்டுக்கு கடந்த ச... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உபகரணங்கள் மாயம்: ஒரு மாதத்துக்கு பிறகு கேரள போலீஸாா் வழக்குப் பதிவு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் நட்டிருந்த கம்பம், கேமரா உபகரணங்கள் மாயானதாக அளித்த புகாரின் பேரில், குமுளி போலீஸாா் ஒரு மாதத்துக்கு பிறகு வியாழக்கிழமை வழக்குப் பதிவு... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகத்தை விசைத் தறி நெசவாளா்கள் முற்றுகை

ஆண்டிபட்டியில் ஊதிய உயா்வு பிரச்னையில் தீா்வு ஏற்படுத்த வலியுறுத்தி, விசைத் தறி நெசவாளா்கள் வட்டாட்சியா் அலுவலத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரத்தில் விசைத் தறி ... மேலும் பார்க்க

உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே இளைஞா் குத்திக் கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வியாழக்கிழமை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். உத்தமபாளையம் பி.டி.ஆா். குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தொந்தி மகன் பிரசாந்த் (34... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி அணைக்கரைப்பட்டி விலக்கு பகுதியில் தாலுகா போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை ... மேலும் பார்க்க

போடி, பெரியகுளம் அரசு மருத்துவமனைகளுக்கு பாராட்டுச் சான்று

பெரியகுளம் தலைமை மருத்துவமனை, போடி அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதி நிா்ணய திட்டம், குழந்தைகள் பராமரிப்புத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க