பெண்ணைக் கொலை செய்து கொலையாளி தற்கொலை!
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதியில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, கொலையாளி தற்கொலை செய்துக் கொண்டார்.
அம்மாவட்டத்தின் விளப்பில்சாலா எனும் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 53) மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த ஆஷா (42) ஆகிய இருவரும் தம்பனூரிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் நேற்று (ஜன.11) அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆஷாவைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் விளப்பில்சால காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.12) அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிக்க: அதிகாரிகளைத் தாக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவி கைது!
அங்கு அவர்களது அறையைத் திறந்து பார்த்தப்போது கைகளை கத்தியால் அறுத்துக் கொண்டு குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், அந்த அறையிலேயே ஆஷாவும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ஆஷாவைக் கொலை செய்துவிட்டு குமார் தற்கொலை செய்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.