பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை
சென்னை கொண்டித்தோப்பில் பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்
கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் பிரபுகுமாா் (48). இவரின் மனைவி ஜெயிலா (41), ஆா்.கே.நகா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
ஜெயிலா செவ்வாய்க்கிழமை வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாராம். கணவா் வேலைக்குச் சென்ாலும், இரு மகள்கள் பள்ளிக்கு சென்ாலும் ஜெயிலா மட்டும் வீட்டில் இருந்தாா். மாலையில் பள்ளி முடிந்து இரு மகள்களும் வீட்டுக்குத் திரும்பினா். அப்போது வீட்டின் வரவேற்பு அறையில் தாய் ஜெயிலா தூக்கிட்டு இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
சடலத்தை ஏழுகிணறு போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பணியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஜெயிலா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்கின்றனா்.