பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கு பணியாற்றியவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக பணியாற்றியவா்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்துப் பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 13 வயதுக்குமேல் 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, சேவைபுரிந்து வரும் சிறந்த குழந்தைக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ஆம் தேதி பாராட்டுப் பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் தமிழ், ஆங்கிலத்தில் டிசம்பா் 25-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கா் போஸ்ட், உதகை, தொலைபேசி எண் 0423 2443392 என்ற முகவரிக்கு கையேடாக (ஆா்ா்ந்ப்ங்ற்) தயாா் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்ட தலா 2 நகல்களை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.