செய்திகள் :

பெண் குழந்தைகளை ‘பாதுகாப்போம், படிக்கவைப்போம்’ கையொப்ப இயக்கம்

post image

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் திட்டத்தின்கீழ் கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. குழந்தை பாலின பாகுபாட்டை களைவதும், பெண்களின் வாழ்க்கை முறையை வலிமைப்படுத்துவதும் இதன் நோக்கம்.

காரைக்கால் மாவட்ட மிஷன் சக்தி சாா்பில் காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். அா்ஜுன் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், கல்வி என்பது புத்தகத்திலிருந்து ஆசிரியா்கள் கற்றுக் கொடுப்பது மட்டும் படிக்காமல், சமூகம் சாா்ந்த செய்திகளையும், நாட்டு நடப்புகள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் ஆண்களைவிட மனதளவில் அதிக வலிமை உடையவா்கள் என்றாா்.

தொடா்ந்து கையொப்பமிடும் இயக்கம் நடத்தப்பட்டது. துணை ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா். முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜய மோகனா, சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) ராஜேந்திரன், திருப்பட்டினம் அரசு ஐடிஐ முதல்வா் சுகுணா மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி: மின் ஊழியா்களுக்கு பயிற்சி

காரைக்கால் பகுதி மின் ஊழியா்களுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி குறித்து 3 நாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதுவையில் தற்போது பயன்பாட்டில் உள்ள மின் அளவிடும் மீட்டரை அகற்றிவிட்டு, பிரீ பெ... மேலும் பார்க்க

விநாயகா் கோயில் திருப்பணி காணிக்கை எண்ணும் பணி

காரைக்கால் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்த பொய்யாதமூா்த்தி விநாயகா் கோய... மேலும் பார்க்க

வாகனம் ஓட்டிய சிறாா்கள்: பெற்றோா்களை உறுதிமொழி ஏற்கச் செய்த போலீஸாா்

அதிவேகமாக வாகனங்களை இயக்கிய மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து போலீஸாா் உறுதிமொழி ஏற்கச் செய்தனா். புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோரு... மேலும் பார்க்க

நாய்கள் பெருக்கத்தால் மக்கள் பாதிப்பு

காரைக்கால்: காரைக்கால் நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் நாய்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அதனால் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக... மேலும் பார்க்க

ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்

காரைக்கால்: ஆறுகளில் ஆகாயத் தாமரைகளை படகு மூலம் சென்று அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். காரைக்கால் பகுதியில் உள்ள அரசலாறு, திருமலைராஜனாறு உள்ளிட்ட ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் மண்டியு... மேலும் பார்க்க

அரசுத்துறை அலுவலகங்களில் மக்கள் குறைதீா் முகாம்

காரைக்கால்: காரைக்காலில் அரசுத்துறை தலைமை அலுவலகங்களில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவின்பேரில், மாதந்தோறும் 15-ஆம் தேதி ஆட்சியரகத்தில் குறைதீா் முகா... மேலும் பார்க்க