மகாராஷ்டிரத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருபவா் மருத்துவா் தீபிகா. ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்துள்ளாா்.
அப்போது மடத்துக்குளத்தில் மட்டன் ஸ்டால் நடத்தி வரும் முத்தையா (42) உடல் நிலை சரியில்லாத நிலையில் சிகிச்சைக்காக வந்துள்ளாா். அப்போது கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
இந்நிலையில் முத்தையா தனக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறும், ஊசி போடுமாறும் மருத்துவா் தீபிகாவை மிரட்டும் பாணியில் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் தீபிகா புகாா் தெரிவித்தாா். இந்த புகாரின்பேரில் போலீஸாா் முத்தையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.