செய்திகள் :

பெண் முன்னேற்றத் திட்டங்கள்: இலவசமோ, உதவியோ, செலவோ அல்ல... முதலீடு!

post image

‘பாலின சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் கொள்கைகளில் அதன் முதலீடும், கவனமும் அதிகரித்துள்ளது. ஆனால், சமூகக் கட்டுப்பாடுகள், பணிச்சூழல் பங்களிப்புக் குறைவு மற்றும் பெண் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், முழுமையான பாலின சமத்துவத்தை அடைய தடையாக உள்ளன’ என்று தெரிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் அமைப்பான ஐ.நா.

அந்த அமைப்பின் உயர் அலுவலர்களில் ஒருவரான டானியல் சீமோர் மற்றும் இந்தியப் பெண்களுக்கான ஐ.நா பிரதிநிதி சூசன் ஜேன் ஃபெர்குசன் இருவரும் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ள மேற்கண்ட மதிப்பீடு, பெண் சமத்துவத்தில் இந்தியா கடக்க வேண்டிய சவால்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

நாட்டில் பெண் முன்னேற்றத்துக்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள பெரும் முயற்சிகள், உலக அரங்கில் பாராட்டுப் பெற்றவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பஞ்சாயத்து தேர்தல்களில் 33% முதல் 50% வரை இட ஒதுக்கீடு; சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் 33% இட ஒதுக்கீட்டுக்கான முன்னெடுப்பு; மகப்பேறு விடுமுறை சட்டங்கள்; ராணுவத்தின் அனைத்து மட்டங்களிலும் பணியமர்த்தப்படுவது; பாலின பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என எடுத்து வைக்கப்படும் ஒவ்வோர் அடியும் வலிமையானதே!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், பெண் முன்னேற்றம் சார்ந்து தொலைநோக்குடனும், கால மாற்றத்துக்கு ஏற்பவும் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களைப் பாராட்டுவோம். அதேநேரம், பெண் கல்வி, ஆரோக்கியம் தொடங்கி இந்த டிஜிட்டல் யுகத்துக்கான பணிகள் மற்றும் தொழில் பங்களிப்பு வாய்ப்புகள் வரை செல்ல வேண்டிய தூரமும் நீண்டு கிடக்கிறது என்பதை உணர்வோம்.

நமக்குள்ளே...

உரிய திட்டங்களையும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளையும் அடைய அரசு முதலீடு செய்வதுடன், தனியாரின் முதலீடுகளும் அவசியம். ஆம்... இது உதவியோ, சேவையோ அல்ல... முதலீடு என்பதை உணர்ந்து தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். அந்தப் பெரும் மனிதவளத்தின் மூலம் அதிகரிக்கப்படும் உற்பத்தியின் பங்குதாரர்களாக இருக்கப்போவது அவர்களும் தானே?!

சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, முன்னேற்றத் திட்டங்களுக்கு முன்னோடியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவை... பாலினம் சார்ந்த பயமுறுத்தல்கள் இல்லாத பாதுகாப்பான வாழ்வை பெண்களுக்கு உறுதி செய்வது; பெண்களின் விடுதலை, சுதந்திரம், உரிமைக்கு எதிராக இன்றும் வேர்ப்பிடித்திருக்கும் பழமைவாத சமூகக் கட்டுப்பாடுகளைக் களைந்தெறிவது; குடும்ப வன்முறை முதல் பாலியல் கொடுமைகள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரேயடியாக ஒழிப்பது என இந்த மூன்றுக்கும்தான்.

களைகளை வெட்டியபடியே சிகரத்தில் ஏறுவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

``புகார் மனுக்கு ரசீது கொடுக்கவில்லை'' - கொட்டும் மழையில் சாலை மறியல்... விருதுநகரில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், புகார் மனுவுக்கான ரசீதுகேட்டு கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்ட... மேலும் பார்க்க

PAN 2.0: 'கட்டணம் இல்லை' - QR கோடுடன் அப்டேட் செய்யப்படவிருக்கும் பான் அட்டைகள்!

பான், டான் எண்ணை ஒன்றிணைத்து, இனி பான் எண்ணை மட்டும் டிஜிட்டல் சேவைகளுக்கு பயன்படுத்தும்படியான பான் 2.0 திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பான் 2.0 ... மேலும் பார்க்க

`லிஃப்ட்டையே காணோம்; ரூ.27 லட்சம் எங்கே?' - ஒப்பந்ததாரருடன் சிக்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2017 - 2018ம் ஆண்டில் ஆய்வகம், தீவிர சிகிச்சைப் பிரிவு, டயாலிசிஸ், லிஃப்ட் உள்ளிட்ட வசதிகளுடன் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம்... மேலும் பார்க்க

Murmu: பழங்குடிகள் சந்திப்பு டு பட்டமளிப்பு விழா - 4 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர்

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகைத் தர இருக்கிறார். நாளை மறுநாள் 27 -ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையத்தை வந்தடைய இருக்கிறார். ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி `ஸ்கெட்ச்’ - செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக-வில் இணைந்த கோவை நாதக-வினர்!

நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் 24-ம் தேதி தி.மு.க-வில் இணைந்தனர். அவர்கள் நா.த.க-விலிருந்து வெளியேறி, தி... மேலும் பார்க்க

Wayanad: வயநாட்டில் டெபாசிட் இழந்த பா.ஜ.க, தோற்றாலும் ஆறுதலில் கம்யூனிஸ்டுகள்! பின்னணி என்ன?

வயநாடு இடைத்தேர்தலில் சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றியை காங்கிரஸ் கூட்டணி வசமாகியிருக்கிறார் பிரியங்கா காந்தி. இவரை எதிர்த்து போட்டியிட்ட கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட... மேலும் பார்க்க