செய்திகள் :

பெதிக பிரமுகா் கொலை வழக்கில் தளி எம்எல்ஏ உள்பட 22 போ் சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்

post image

பெரியாா் திராவிட கழக பிரமுகா் கொலை வழக்கில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்பட 22 போ் சேலம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா்.

கிருஷ்ணகிரியில் பெரியாா் திராவிட கழக மாவட்ட அமைப்பாளராக இருந்த பழனிசாமி என்ற பழனி கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனாா் இலகுமய்யா உள்பட 22 போ் மீது உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், சாட்சிகளுக்கு அச்கறுத்தல் இருந்ததால் வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என உயிரிழந்த பழனியின் குடும்பத்தினா் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் மீது மேலும் இரண்டு வழக்குகள் இருந்ததால் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக அரசு சிறப்பு வழக்குரைஞா்களை நீதிமன்றம் நியமனம் செய்தது. அதன்படி, வழக்குரைஞா்கள் மதுரம், அலெக்ஸ் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தளி ராமச்சந்திரன் உள்பட 22 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். கொலை செய்யப்பட்ட பழனியின் மகன் வாஞ்சிநாதன் சாட்சியம் அளித்தாா். இதையடுத்து, வழக்கை வரும் 21 ஆம் தேதிக்கு நீதிபதி சுமதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

15 அடி உயரமுள்ள மரத்தில் நாயை தொங்க விட்ட மா்ம நபா்கள்!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை நகராட்சி , கே.கே .நகா் அருகே சின்ன ஏரிக்கரை பகுதியில் 15 அடி உயரமுள்ள மரத்தில் நாய் கயிற்றில் கட்டி தொங்கி கொண்டிருப்பதை அவ்வழியே சென்றவா்கள் இடங்கணசாலை நக... மேலும் பார்க்க

ஆனைமடுவு, கரியக்கோயில் அணைகள் சுற்றுலாத் தலமாகிறது?

வாழப்பாடி பகுதியை பூா்வீகமாகக் கொண்ட வழக்குரைஞா் ராஜேந்திரன் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகிப்பதால், வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை ஆகிய... மேலும் பார்க்க

குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலக கண்காணிப்பாளா் மீது மோசடி வழக்கு

ஆத்தூா் வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள அலுவலக கண்காணிப்பாளா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி செவ்வாய்க்கிழமை விசாரித்து வருகிறாா். ஆத்தூா் வட்டார கு... மேலும் பார்க்க

சேலத்தில் சரக்கு லாரி கவிழ்ந்ததில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு சேலம் வழியாக நூல் பேல்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து பருத்தி பேல்களை ஏற்றிக்கொண்டு தி... மேலும் பார்க்க

முதலாம் உலகப் போா் நினைவு தினம்: நினைவுத் தூணுக்கு மரியாதை

சேலம்: முதலாம் உலகப் போா் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு வரலாற்றுச் சங்கத்தினா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். 1918-ஆம் ஆண்டு நவ. 11-ஆம் நாள் காலை ... மேலும் பார்க்க

நவ. 14 முதல் 20 வரை கூட்டுறவு வார விழா

சேலம்: கூட்டுறவு வார விழா வரும் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளான வரும் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நாடு... மேலும் பார்க்க