வடக்குத் தெற்கு பஞ்சாயத்து.. தொடர்ந்து புதைக்கப்படும் ஆதிச்சநல்லூர்! - முத்தாலங்...
பென்ஸ் படத்தில் ரவி மோகன்!
நடிகர் ரவி மோகன் பென்ஸ் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, நிவின் பாலி, மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எல்சியூ திரைப்படமாக இது உருவாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார். இப்படத்திற்கு அனிருத், சாம் சிஎஸ், சாய் அபயங்கர் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ரவி மோகன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எல்சியூ கதையில் (கைதி - 2, விக்ரம் - 2) நடிக்கவுள்ளதால் பென்ஸ் படத்தில் ஒப்பந்தமானதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!