ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!
நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் “ப்ரோ கோட்” திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” -ன் அறிமுக விழா நேற்று (ஆக.26) பல முன்னணி பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படமான “ப்ரோ கோட்”-ன் முன்னோட்ட விடியோவை படக்குழு இன்று (ஆக.27) வெளியிட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும், இந்தப் புதிய படத்தில் நடிகர்கள் ரவி மோகன், எஸ் ஜே சூர்யா, மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன் மற்றும் நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், கௌரி பிரியா, மாளவிகா மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திருமண வாழ்வில், மனைவிகளால் கொடுமைகள் அனுபவிக்கும் கணவன்களைக் குறித்த கதைகளத்துடன் கூடிய நகைச்சுவை படமாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தனது தயாரிப்பில் விரைவில் இரண்டு படங்கள் வெளியாகும் என நடிகர் ரவி மோகன் அறிவித்திருந்தார். அதில், இரண்டாவது படமான “அன் ஆர்டினரி மேன்” (An Ordinary Man) எனும் படத்தை தானே இயக்குவதாகவும் அவர் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!