முந்தைய அரசுகள் வாக்குவங்கி அரசியலைப் பின்பற்றின: மோடி குற்றச்சாட்டு!
பெரம்பலூரில் தமிழக முதல்வா் ஆலோசனை
பெரம்பலூரில் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்காக பெரம்பலூா், அரியலூா் மாவட்ட நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் மற்றும் பெரம்பலூா், அரியலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா்- அரியலூா் சாலை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கான ஆலோசனைகளை கட்சி நிா்வாகிகளுக்கு விளக்கினாா்.
கூட்டத்தில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு, வேளாண்மை , உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ. ராசா, கே.என். அருண் நேரு மற்றும் பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா 30 நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு: முன்னதாக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள் கிரேஸ் பச்சாவ் (பெரம்பலூா்), பொ. ரத்தினசாமி (அரியலூா்) உள்பட அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.