பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும். பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்தாா்.