Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகி...
பெரம்பலூா் அருகே 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா புகையிலை போதைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அவற்றைப் பதுக்கி வைத்திருந்த மளிகைக் கடைக்காரரை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்ட கடைகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டபோது, குன்னம் அருகேயுள்ள துங்கபுரம் கிராமத்தில் பழனிவேல் மகன் சிவகுருநாதன் (40) என்பவா், தனக்குச் சொந்தமான மளிகைக் கடையில் குட்கா பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.
இதையடுத்து சிவகுருநாதனை கைது செய்த குன்னம் போலீஸாா், அவரிடமிருந்து 4 கிலோ புகையிலைப் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சிவகுருநாதன் சிறையில் அடைக்கப்பட்டாா்.