செய்திகள் :

`பெரியார் இல்லாமல் நமக்கு அரசியல் இல்லை!’ – சீமான் கருத்துக்கு இயக்குநர் பார்த்திபன் பதில்

post image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப நாட்களாக பொது வெளியில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு பெரியாரிஸ்டுகளும், பெரியாரிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு `பெரியார் குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பெரியார் ஆதரவாளர்கள் சீமான் வீட்டை முற்றுகையிட்டனர்.

பெரியார்
பெரியார்

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சுக்காக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெரியார் குறித்து சர்சையாகவே பேசி வருகிறார் சீமான். ஈரோடு இடைத்தேர்தலிலும் பெரியார் மீதான விமர்சனத்தையே அவர் பிரதானமாக முன்னிறுத்தி, பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய படப்பிடிப்புக்கான ஏற்பாடு தொடர்பாக புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்த பார்த்திபன், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, `நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை விமர்சித்துக் கொண்டிருக்கிறாரே ?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சீமான்
சீமான்

அதற்கு பதிலளித்த பார்த்திபன், ``பெரியாரை நீக்கிவிட்டு இங்கு நமக்கு அரசியல் என்று இல்லை. அதனால்தான் அவரும் பெரியாரை வைத்து அந்த அரசியலை செய்கிறார். அது அவருக்கு ப்ளஸ்சா மைனசா என்பது வேறு விஷயம். இப்போதும் நாம் அரசியல் செய்வதற்கு பெரியார் தேவைப்படுகிறார் இல்லையா? அப்படியென்றால் அவர் எவ்வளவு பெரிய பெரியார் ?” என்று பதிலளித்தார்.

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கதறித் துடித்த பெண்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பக... மேலும் பார்க்க

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' - கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பய... மேலும் பார்க்க

"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" - கனிமொழி எம்.பி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயல... மேலும் பார்க்க

20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எம்.பி-யிடம் விசாரணை!

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையில் இருந்த பறக்கும் படையினர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பணத்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடங்கள்!' - கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே... மேலும் பார்க்க