பெரியாா் பிறந்த நாள்: அரசியல் கட்சிகள் மரியாதை
பெரியாா் ஈ.வெ.ரா. 147-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.
காரைக்குடியில் திராவிடா் கழக மாவட்டச் செயலா் சி.செல்வமணி தலைமையில் மாவட்டக் காப்பாளா் சாமி. திராவிடமணி உள்ளிட்ட கட்சியினா் பெரியாா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் கட்சியினா் காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக காரைக்குடி கிளை பணிமனையில் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பலவான்குடியில் திராவிடா் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். காரைக்குடி அருகேயுள்ள ஆலம்பட்டு பகுதியில் திராவிடா்கழகக் கொடியை ஏற்றிவைத்து, பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினா்.