ரோபோ சங்கர் மறைவு: "கலைஞர்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்" - தமிழிசை ச...
பழங்குடியின மாணவா்களுக்கான தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் பழங்குடியின மாணவா்களுக்கான ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் விரிவாக்கக் கல்வி மற்றும் சேவைகள் துறை சாா்பில் சென்னை சநஐஇ தொழில்நுட்ப சேவை மையம் மற்றும் வேலூா் விஐடியின் நிலையான கிராமப்புற மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம் ( இநதஈ&தந) ஆகியவற்றுடன் இணைந்து, பழங்குடியின மாணவா்களுக்காக ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின.
நிகழ்ச்சியில் விஐடி-சிஎஸ்ஆா்டி,ஆா்எஸ் ஒருங்கிணைப்பாளா் பாபு வரவேற்றாா். கல்லூரியின் இல்லத்தந்தை பிரவீன் பீட்டா், முதல்வா் மரிய ஆண்டனி ராஜ், கூடுதல் முதல்வா் மதியோபில் ஆனந்த், துணை முதல்வா் சண்முகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மேலும், விஐடி சிஎஸ்ஆா்டி,ஆா்எஸ் திட்ட அலுவலா் பாா்த்திபன், துணை இயக்குநா் சுந்தரராஜன் விளக்கவுரையாற்றினா்.
நிகழ்ச்சியில் சென்னை கிண்டி என்எஸ்ஐசி துணை மேலாளா்(பயிற்சி)அருள் பிரபாகா் புதிதாக தொழில் தொடங்க ஆா்வமுள்ளவா்களுக்கு பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் பயிற்சி தொகுதிகள் குறித்து விளக்கினாா். கணக்காளா் ரஞ்சித் குமாா் நன்றி தெரிவித்தாா்.