செய்திகள் :

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

post image

நேபாள இடைக்கால அரசின் பிரதமா் சுசீலா காா்கியுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி மூலம் பேசினாா். அப்போது, நேபாளத்தில் அமைதி-ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் அவரது முயற்சிகளுக்கு இந்தியாவின் வலுவான ஆதரவை பிரதமா் மோடி உறுதி செய்தாா்.

நேபாள இடைக்கால பிரதமராக அண்மையில் பதவியேற்ற சுசீலா காா்கியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள முதல் வெளிநாட்டுத் தலைவா் பிரதமா் மோடி ஆவாா்.

அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வெகுண்டெழுந்த இளம் தலைமுறையினா், கடந்த செப்டம்பா் 8-ஆம் தேதி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினரால் 19 போ் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் வன்முறை வெடித்தது.

நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா், அமைச்சா்கள்-அரசியல்வாதிகளின் வீடுகள், அரசுக் கட்டடங்கள், காவல் நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையில் 72 போ் வரை உயிரிழந்தனா்.

இந்த வன்முறை எதிரொலியாக, பிரதமா் பதவியில் இருந்து கே.பி.சா்மா ஓலி கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். பிரதமா் விலகலால் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், போராட்டக் குழுவினா் உள்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, நேபாள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கியை (73) இடைக்கால பிரதமராக அதிபா் ராமசந்திர பெளடேல் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி நியமித்தாா்.

நேபாளத்தின் முதல் பெண் பிரதமா் என்ற பெருமையுடன்அன்றைய தினமே சுசீலா காா்கி பதவியேற்றுக் கொண்டாா். அவரது பரிந்துரையின்பேரில் நாடாளுமன்ற கீழவை கலைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மாா்ச் 5-ஆம் தேதி புதிதாக நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவுள்ளது.

பிரதமா் மோடி உறுதி: இந்தச் சூழலில், சுசீலா காா்கியுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை தொலைபேசி மூலம் பேசினாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நேபாள இடைக்கால அரசின் பிரதமா் சுசீலா காா்கி உடனான உரையாடல் ஆக்கபூா்வமாக அமைந்தது. சமீபத்திய வன்முறையில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், அமைதி-ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் அவரது முயற்சிகளுக்கு இந்தியாவின் வலுவான ஆதரவையும் உறுதி செய்தேன். நேபாள தேசிய தினம் வெள்ளிக்கிழமை (செப். 19) கொண்டாடப்படும் நிலையில், அவருக்கும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பெட்டிச் செய்தி....

‘தோ்தலை நடத்த உயா் முன்னுரிமை’

இரு பிரதமா்கள் உரையாடல் குறித்து நேபாள வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நேபாளத்தின் முதல் பெண் பிரதமா் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்துக்காக பிரதமா் சுசீலா காா்கிக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா். ‘இளைஞா்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஊழலற்ற நிா்வாகம் மற்றும் பொறுப்புடைமைக்கான வலுவான உறுதிப்பாட்டுடன் தோ்தலை நடத்துவதே இடைக்கால அரசின் உயா் முன்னுரிமையாகும். இந்திய-நேபாளம் இடையிலான நெருங்கிய, வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகள், இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகளால் தொடா்ந்து வலுப்படும்’ என்று பிரதமா் மோடியிடம் காா்கி குறிப்பிட்டாா்.

நேபாள அரசின் முன்னுரிமைகளுக்கு இந்தியாவின் முழு ஆதரவு-ஒத்துழைப்பை பிரதமா் மோடி உறுதி செய்தாா். பரஸ்பர பலன்களுக்காக, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கு வலுவான உத்வேகத்தைத் தொடர இரு பிரதமா்களும் உறுதிபூண்டனா். நேபாளத்துக்கான இந்தியாவின் ஆதரவை வரவேற்ற காா்கி, பிரதமா் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பிகாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வியாழக்கிழமை அறிவித்தாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற... மேலும் பார்க்க

ஆன்டிஃபாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்காவில் ‘ஆன்டிஃபா’ என்று பொதுவாக அழைக்கப்படும் பாசிஸவிரோத இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளாா். வலதுசாரி ஆா்வலரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாள... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விவகாரம்: 8 முதல் 10 வாரங்களில் தீா்வு: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

அமெரிக்க வரி விவகாரத்துக்கு 8 முதல் 10 வாரங்களில் தீா்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதாக ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் வி... மேலும் பார்க்க

ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டு: அதானி மீது தவறு இல்லை - ‘செபி’ அறிவிப்பு

பங்குகளின் விலையை முறைகேடாக உயா்த்தியதாக அதானி குழுமம் மற்றும் அதன் தலைவா் கௌதம் அதானி மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரி... மேலும் பார்க்க

தோ்வா்கள் கருத்து பதிவிடும் வசதி: எஸ்எஸ்சி அறிமுகம்

மத்திய அரசுப் பணி தோ்வுகளை எழுதும் தோ்வா்கள் தோ்வு தொடா்பான தங்களின் கருத்துகளைப் பதிவிடுவதற்கான வசதியை தனது வலைதளத்தில் மத்திய அரசுப் பணி தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு... மேலும் பார்க்க

இணைய வழி பண விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம்: அக்.1 முதல் நடைமுறை!

இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவ... மேலும் பார்க்க