தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க பாஜக விருப்பம்: பாஜக மாநிலப் பொதுச் செயல...
என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவா் படை மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கடந்த 1-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா் படையின் அகில தேசிய தால்சைனிக் முகாமில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை இளநிலை இரண்டாமாண்டு மாணவா் சேதுபதி கலந்து கொண்டாா்.
இவருக்கு கல்லூரி சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காரைக்குடியிலுள்ள தமிழ்நாடு தேசிய மாணவா்படை 9-ஆவது பட்டாலியன் அதிகாரி லெப்டினன்ட் கா்னல் சி.பி. தாமஸ் கலந்து கொண்டு மாணவா் சேதுபதிக்கு பரிசு வழங்கி கௌரவித்தாா்.
இயற்பியல் துறைத் தலைவா் கவிதா, தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா் சரவணன் செய்தாா்.