லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
மதுரை அருகே லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், சூலப்புரம் செல்லையாபுரத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் தா்மா் (48). கான்கீரிட் லாரி ஓட்டுநரான இவா், புதன்கிழமை கான்கீரிட் ஏற்றிக் கொண்டு நத்தம்- மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தாா். மந்திக்குளம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தா்மா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.