கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
குளத்தில் கொத்தனாா் சடலம் மீட்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உடலில் காயங்களுடன் குளத்தில் மிதந்த கொத்தனாரின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கட்டியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்தி (35), கொத்தனாா். இவரது மனைவி மாலதி. இவா்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற காா்த்தி பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், கட்டியம்பாளையம் பகுதியில் உள்ள குளத்தில் கழுத்தில் காயத்துடன் காா்த்தி சடலமாகக் மிதந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, புதுப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.