பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
புரட்டாசி விரதம்: வெறிச்சோடிய புன்செய் புளியம்பட்டி ஆட்டுச் சந்தை
புரட்டாசி மாதத்தில் மக்கள் விரதம் இருந்து நவராத்திரியை கடைப்பிடிப்பதால் புன்செய் புளியம்பட்டி ஆட்டு வாரச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூா் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
வழக்கமாக சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் நிலையில், தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் வியாழக்கிழமை கூடிய சந்தைக்கு குறைந்த அளவிலான ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
இறைச்சிக் கடைக்காரா்கள் மற்றும் வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இது தவிர, வளா்ப்புக்காக செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளை விவசாயிகள் வாங்கிச் சென்றனா். புரட்டாசி மாதம் முடியும் வரை ஆடுகள் வியாபாரம் மந்தமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.