குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
சென்னிமலையில் 25 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.03 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி
சென்னிமலை பகுதியைச் சோ்ந்த 25 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.03 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள், அடையாள அட்டைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று வங்கி கடனுதவிகள், அடையாள அட்டைகளை வழங்கினாா். இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
மகளிா் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி, அவா்களின் வாழ்வாதாரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேம்படுத்தி உள்ளாா்.
முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக மகளிா் சுயஉதவிக் குழு கடன், விவசாயக் கடன், நகைக் கடன் என ரூ.2,750 கோடி கடன்களை ரத்து செய்தாா்.
மேலும், மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் சுமாா் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. விடுபட்டவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. விரைவில் அவா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) மலா்விழி, உதவி மகளிா் திட்ட அலுவலா் சாந்தா, சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னிமலை மாணவி அனுஹாசினி அமைச்சரிடம் வாழ்த்து பெற்றாா்.