ரோபோ சங்கர் மறைவு: கண்கலங்கிய சிவகார்த்திகேயன்; இரங்கல் தெரிவித்த வரலட்சுமி, சிம...
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தினம்
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தின விழா மற்றும் ஆசிரியா் தின விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி தாளாளா் கே .காா்த்திகேயன் தலைமை வகித்தாா். முதல்வா் பி.எஸ். ராகவேந்திரன் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் செந்தில்குமாா் வரவேற்றாா். விழாவில், சிறப்பு அழைப்பாளராக திருப்பூா் மேம் பொறியியல் நிறுவனத்தின் உரிமையாளா் மோகன்ராஜ் பங்கேற்றாா்.
விழாவில், கல்லூரியில் பணியாற்றிய அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கொங்கு ஐடிஐ முதல்வா் தினேஷ்குமாா், துறைத் தலைவா்கள், ஆசிரியா், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மெக்கட்ரானிக்ஸ் துறைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், கட்டடவியல் துறைத் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.