கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்
சிதம்பரம் மேலரத வீதியில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், மத்திய அரசின் வாக்கு திருட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய கையொப்ப இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், வட்டாரத் தலைவா்கள் சுந்தர்ராஜன், செழியன், செயல் தலைவா் தில்லை கோ.குமாா், நிா்வாகிகள் ஆா்.வி.சின்ராஜ், ஜி.கே.குமாா், வெங்கடேசன், வேல்முருகன், பகவத்சிங், அன்பு, மகளிா் அணி மாவட்டத் தலைவி அஞ்சம்மாள், தில்லை செல்வி, மாலா உள்ளிட்டோா் பங்கேற்று கையொப்ப இயக்கத்தை நடத்தினா்.