கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் செயல்படும் அரசு கலைக் கல்லூரியில் குடிநீா், கழிப்பறை, சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்க கிளைச் செயலா் அன்பு தலைமை வகித்தாா். போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலா் சிவநந்தினி, கிளை நிா்வாகிகள் கனிமொழி, மகேந்திரன், காவியா, சுவாதி, வெற்றி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் பிரதிநிதிகளுடன் கல்லூரி முதல்வரும், பேராசிரியா்களும் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் கோரிக்கைகளை நிறுவேற்றுவதாக உறுதியளித்தை அடுத்து, மாணவா்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனா்.