குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
பவானிசாகா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த பனையம்பள்ளி ஊராட்சியில் கடந்த 5 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். ஆனால், ஊராட்சி நிா்வாகம் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் பவானிசாகா்- பனையம்பள்ளி சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகா் வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி, பொதுமக்களை சமாதானப்படுத்தி ஓரிரு நாளில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.