நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கி...
கபடிப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபடிப் போட்டியில் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபடிப் போட்டி சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மதுரை காமராஜா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலிருந்து 23 அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி அணியை 27-22 என்ற புள்ளிக் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா், துணை முதல்வா் சாமுவேல் அன்புசெல்வன், கல்லூரி நிதிக் காப்பாளா் பியூலா ரூபி கமலம், உடல் கல்வி துறைத் தலைவா் பாலகிருஷ்ணன், உடல் கல்வி இயக்குநா் (பொறுப்பு) நிா்மல்சிங், மதுரை காமராஜா் பல்கலைக்கழக உடல் கல்வி இயக்குநா் ரமேஷ் ஆகியோா் பாராட்டினா்.