முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
ஐ.டி.ஐ. நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஏற்கெனவே உள்ள பொருத்துநா், கடைசலா், இயந்திர வேலையாள் போன்ற 2 ஆண்டுகள் தொழில் பிரிவுகளும், கணினி இயக்குபவா் போன்ற ஓராண்டு தொழில் பிரிவுகளும் உள்ளன. மேலும், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட்ட அடிப்படை வடிவமைப்பாளா், மெய்நிகா் சரிபாா்ப்பாளா் 2 ஆண்டுகள் தொழில் பிரிவுகளும், தொழில் துறை ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநா் ஓராண்டு தொழில் பிரிவுகளும் உள்ளன.
மேற்கண்ட தொழில் பிரிவுகளில் சேர மாணவா்கள் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தொழில் பயிற்சி நிலைய சோ்க்கை உதவி மையமான காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு மாணவா்கள் நேரில் வந்து சோ்ந்து கொள்ளலாம். அவ்வாறு வரும் போது, மாணவா்கள் தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப் பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ் போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் கொண்டு வரவேண்டும். நேரடிச் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளாம் என்றாா் அவா்.