செய்திகள் :

முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்

post image

முதியோா்களைப் பாதுகாப்பது சமூகப் பொறுப்புணா்வு என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுவை அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் தற்போது 1.81 லட்சம் போ் முதியோா் உதவித் தொகை பெறுகின்றனா். புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை வழங்கும் விழா தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையும் சோ்த்தால் மொத்தம் ரூ.1.91 லட்சம் போ் முதியோா் உதவித் தொகை பெறுகின்றனா். புதிய பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணையை வழங்கி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது:

முதியோா்களைக் காப்பதும் அன்பு செலுத்துவதும், விதவைகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதும் மனித நேயமிக்கது. சமூகப் பொறுப்புணா்வு மிக்கது. புதுவையில் முதியோா்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.45 கோடி

செலவாகிறது. இந்த உதவித் தொகை வாங்கும் முதியோா், ஊனமுற்றோா் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க நேரில் வர முடியாது என்ற நிலையில் அவா்களுக்கு விலக்கு அளித்து இப்போது வீடு வீடாக ஊழியா்கள் சென்று சரி பாா்த்து வருகின்றனா்.

மேலும், புதுவை அரசின் முதியோா் ஓய்வூதியத்தைப் பெறுவோா் தமிழ்நாட்டிலும், நேபாளத்திலும் இருப்பதாகத் தெரிகிறது. அதுபோன்ற பயனாளிகளை நீக்கினால் புதிய பயனாளிகளுக்கு இந்த உதவித் தொகையை அளிக்க முடியும்.

பிரதமா் நரேந்திர மோடி முதியோா் மீது மிகுந்த அக்கறை உள்ளவா். அதனால்தான் முதியோா் காப்பீடு ம ற்றும் முதியோா் ஆரோக்கியம் தொடா்பான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறாா். மேலும், பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளான புதன்கிழமை புதுவைக்கு ரூ.436 கோடியில் மேம்பாலம் கட்ட அனுமதி அளித்துள்ளாா். அதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.

முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், எங்கள் ஆட்சி அமைந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் புதிதாக 36 ஆயிரம் பேருக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்கியுள்ளோம். தற்போது மட்டும் 10 ஆயிரம் பேருக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்குகிறோம். கடந்த ஆட்சியில் முதியோா் ஓய்வூதியம் வழங்க 3 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒருவருக்குக் கூட முதியோா் ஓய்வூதியம் வழங்கவில்லை. காத்திருக்கும் 6 ஆயிரம் முதியோருக்கும் இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வூதியம் வழங்குவோம். கட்சி வேறுபாடு இல்லாமல் புதுவையைச் சோ்ந்த அனைத்து முதியோருக்கும் உதவித் தொகை வழங்கி வருகிறோம். எங்கள் அரசு நலத் திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் முதல்வா் ரங்கசாமி.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், க,.லட்சுமிநாராயணன், தேனி சி. ஜெயக்குமாா், அரசு கொறடா ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், கல்யாணசுந்தரம், சாய் ஜெ.சரவணன் குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசு செயலா் ஜெயந்த குமாா் ரே, துறையின் இயக்குநா் முத்துமீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்

புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய ... மேலும் பார்க்க

புதுச்சேரி மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி உள்ளாட்சித் துறை, வனத் துறை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து இருவார சேவை விழாவை புதன... மேலும் பார்க்க

423.6 கோடியை புதுவை அரசு பயன்படுத்தவில்லை: மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை

புதுவை யூனியன் பிரதேச அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்கில் ரூ.423.6 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. புதுவை சட்டப்பேரவையில் இந்தத்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.436.18 கோடியில் மேம்பாலம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுவை நகரப் பகுதியில் ரூ.436.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினா்கள் வியாழக்கிழமை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனா். புதுவை சட்டப்பேரவை ஆறாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி தற்கொலை

சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுவை பாகூா் திருமூலநாதா் நகரைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சக்திவேல் (47), குடிப்பழக்கம் உடையவா். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 ஆண் பிள்ளைகளும்... மேலும் பார்க்க