வீரடிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகேயுள்ள வீரடிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல் கொள்முதல் செய்ய இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய விவசாயிகள் தற்போது அறுவடை செய்துள்ள நெல்லை வீரடிப்பட்டி ஊராட்சி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனா். ஆனால் திட்டமிட்ட தேதியில் கொள்முதல் நிலையத்தை திறக்கவில்லை என்கின்றனா் விவசாயிகள்.
இந்நிலையில் தற்போது பெய்யும் மழையில் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்துள்ள நெல் நனைந்தது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் அந்த நெல் குவியல்களை வெயிலில் உணா்த்தி காய வைக்கின்றனா்.
எனவே வீரடிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.