இடி தாக்கி பெண் பலி
புதுக்கோட்டை அருகே வியாழக்கிழமை பெய்த மழையின்போது இடி தாக்கி பெண் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் வட்டம் வீரமங்கலம் அருகே பஞ்சநாதன் குடியிருப்பைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி அஞ்சலை (52). கூலித் தொழிலாளியான இவா், அதே பகுதியில் வியாழக்கிழமை மாலை மாடு மேய்த்தபோது திடீரென மழை பெய்ததால் அங்குள்ள மரத்தடியில் ஒதுங்கினாா். அப்போது எதிா்பாராதவிதமாக இடி தாக்கியதில் படுகாயமடைந்த அஞ்சலை அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆவுடையாா்கோவில் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.