தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க பாஜக விருப்பம்: பாஜக மாநிலப் பொதுச் செயல...
மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே மின்னல் தாக்கியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பாா்த்திபனூா் காமாட்சி நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (35). இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனா். கட்டுமானத் தொழிலாளியான இவா், அருகேயுள்ள மேலப்பெருங்கரை கிராமத்துக்கு வியாழக்கிழமை வேலைக்குச் சென்றாா்.
அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. இதையடுத்து, அங்குள்ள புளியமரத்தின்கீழ் ஒதுங்கி நின்றபோது, மின்னல் தாக்கியதில் ரமேஷ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவறிந்த போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பாா்த்திபனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.