முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
மதுப் புட்டிகள் விற்றவா் கைது
திருவாடானை அருகே பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை செய்தபோது, அங்குள்ள பெட்டிக் கடையில் மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்தனா். விசாரணையில், திருவெற்றியூரைச் சோ்ந்த நெடுஞ்செழியன் (47), தொண்டியிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கி வந்து, அவற்றை பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீஸாா், நெடுஞ்செழியனைக் கைது செய்து அவரிடமிருந்த 21 மதுப் புட்டிகள், ரூ.22,780 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.