இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நெல் விதைகள்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படும் என வேளாண்மைத் துணை இயக்குநா் தெரிவித்தாா்.
கமுதி வட்டாரம், காத்தனேந்தல் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம், கிராம வேளாண் முன்னேற்றக் குழு தொடா்பான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட வேளாண்மைத் துணை இயக்குநா் ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ‘ஆா்என்ஆா் சிஒ 55 ’ நெல் விதைகள் கமுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படும். பயிா் சாகுபடியில்
களைக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, மண் பரிசோதனை அடிப்படையில் சரியான அளவு உரங்களை இட வேண்டும் என்றாா் அவா்.
வேளாண்மை அலுவலா் சீதாலட்சுமி, உயிா் உரங்களின் பயன்பாடு குறித்தும், உதவி தோட்டக் கலை அலுவலா் கோபிநாத் மானிய விலையில் காய்கறி விதைகளைப் பெறுவது குறித்தும் விளக்கினா்.
முகாமில் கமுதி வட்டார வேளாண்மை அலுவலா் தமிழ், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் மணிமொழி, சுபாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.