முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த இருவா் கைது
சென்னை எழும்பூரில் பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த இரு ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா்
எழும்பூரில் ஆல்பா்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் மதுபானக் கூடத்தில் புதன்கிழமை மது அருந்திய 3 போ் பட்டாக் கத்திகளை மறைத்து வைத்திருந்தனா். இதுகுறித்து அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், எழும்பூா் போலீஸாா் அங்கு சென்று மது அருந்திக் கொண்டிருந்த 3 பேரையும் பிடிக்க முயன்றனா். ஆனால், ஒருவா் தப்பியோடிவிட்ட நிலையில், இருவரைப் பிடித்து, அவா்களிடமிருந்த இரு பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், சூளை பகுதியைச் சோ்ந்த விமல்ராஜ் என்ற கபாலி (19), புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் (27) என்பதும், விமல்ராஜ் மீது ஏற்கெனவே 3 வழக்குகள், ஏ பிரிவு ரெளடியான பிரகாஷ் மீது 26 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.