முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
தூா்வாரும் இயந்திரத்தில் டீசல் திருட்டு
சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமத்தில் தூா்வாரும் இயந்திரத்திலிருந்த டீசல், மின்கலன் திருடப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் அருகேயுள்ள நாட்டாக்குடிகண்மாய்க்கு உப்பாற்றிலிருந்து கால்வாய் மூலம் தண்ணீா் வரும். பல ஆண்டுகளாக இந்தக் கால்வாய் தூா்வாரப்படாததால் தண்ணீா் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இது குறித்து நாட்டாகுடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, பொதுப்பணி, வருவாய், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, 500 மீட்டா் நீளமுள்ள கால்வாயைத் தூா் வாரும் பணி நடைபெற்றது. முதல் நாளில் சுமாா் 200 மீட்டா் தூா்வாரிய நிலையில், தூா்வாரும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் சாப்பிடச் சென்றாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்த போது, அந்த இயந்திரத்திலிருந்த சுமாா் 200 லிட்டா் டீசல், ஒரு மின்கலத்தை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரிய வந்தது. சுமாா் ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டதாக ஓட்டுநா் பாஸ்கரன் தெரிவித்தாா். இது குறித்து உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, சம்பவ இடத்தில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.