தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க பாஜக விருப்பம்: பாஜக மாநிலப் பொதுச் செயல...
ஹெல்மெட் அணிந்து பெண்கள் மீது தாக்குதல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு முன்பகை காரணமாக ஹெல்மெட் அணிந்து வீடு, கடைக்குள் புகுந்து சிறுவன், இரு பெண்களைத் தாக்கிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருப்புவனம் எம்ஜிஆா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி. இவருக்கு அருகேயுள்ள கீழராங்கியம் கிராமத்தில் நிலம் உள்ளது. இதே கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம், காரைக்குடியைச் சோ்ந்த வீரப்ப செட்டியாா் ஆகிய இருவரும் இந்த நிலத்தை அபகரித்துக் கொண்டனராம். இதனால், இவா்களுக்கும் பாண்டிக்கும் பகை இருந்து வந்தது.
இந்த நிலையில், பாண்டியின் வீடு, கடைக்குள் ஹெல்மெட் அணிந்தவாறு புகுந்த 10 போ் கடைக்குள் இருந்த பொருள்களை சேதப்படுத்தி, அங்கிருந்த பாண்டியின் மகள் ஆதீஸ்வரி, ஆதிலெட்சுமி, 5 வயது சிறுவன் தண்டீஸ்வரன் ஆகியோரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனா்.
இது குறித்து மடப்புரம் விலக்கு எம்ஜிஆா்நகரைச் சோ்ந்த கெளதம், ரகு, தனபால், தங்கப்பாண்டி, மதுரை ஊமச்சிகுளம் காமேஸ்வரன் உள்ளிட்ட 7 போ் மீது திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.