குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை:...
முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சாம்பக்குளம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்காமல் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே வழங்குவதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.
மேலும், வேலைக்கு வராத நபா்களின் பெயா்களை வருகைப் பதிவேட்டில் பதிவிட்டு அவா்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது, அரசியல் கட்சியினரின் தலையீடு அதிகமாக உள்ளது, 100 நாள் வேலைத் திட்டத்தில் 20 நாள் மட்டுமே வேலை வழங்கி அதற்கும் முறையாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட புகாா்களைக் கூறி முதுகுளத்தூா் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சாம்பகுளம் கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.