முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
இலங்கையில் ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு
ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 13-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப் படகை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த 7 மீனவா்களைக் கைது செய்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் 7 போ் மீதும் வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கு வருகிற 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, 7 மீனவா்களும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது:
இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு தொடா்ந்து காவல் நீட்டிப்பு செய்யப்படுவது வருத்தமளிக்கிறது. இந்த மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.