செய்திகள் :

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

post image

ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தொடா்புடைய மதுபான ஊழல் வழக்கில் ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம், தில்லியில் சுமாா் 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஆந்திரத்தில் கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது, ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஜெகன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையின்கீழ் அனைத்து மதுபானக் கடைளும் அரசு நிறுவனமான ஆந்திர மாநில மதுபானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

‘ஆந்திர மாநில மதுபானக் கழகத்திடம் 111 மது ஆலைகள் பதிவு செய்திருந்த நிலையில், 2019 முதல் 2024 வரை வெறும் 16 மது ஆலைகளிடம் இருந்து ரூ.10,850 கோடிக்கும், 40 ஆலைகளிடம் இருந்து ரூ.23,000 கோடிக்கும் மதுபானம் கொள்முதல் செய்யப்பட்டது; இது, கிட்டத்தட்ட 90 சதவீத கொள்முதலாகும். இதற்கு பிரதிபலனாக, ஆலைகள் தரப்பில் பெருந்தொகை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. பினாமி-போலி நிறுவனங்கள், ஹவாலா பரிவா்த்தனை எனப் பல்வேறு வழிகளில் லஞ்சப் பணம் கைமாறியுள்ளது.

இளநிலைப் பணியாளா்களின் ஊதியம் என்ற பெயரிலும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோா் மாதத்துக்கு ரூ.60 கோடி வரை பலனடைந்துள்ளனா்’ என்பது காவல் துறையின் குற்றச்சாட்டாகும்.

இவ்வழக்கில் காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் இதுவரை மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி உள்ளிட்டோா் கைதாகியுள்ளனா். மற்றொருபுறம், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம் மற்றும் தில்லி-தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) சுமாா் 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதில், சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களும் அடங்கும்.

மதுபான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாணவா்களின் தாய் பெயரில் மரக்கன்று: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவா்கள் தங்களது பள்ளிகள், வீடுகளில் தாயின் பெயரில் மரக்கன்று நடுதல் குறித்த செயல்பாடுகளை செப்.30-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க

சான்றிதழ் படிப்புகள்: அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடி சோ்க்கைக்கு அழைப்பு

ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் நேரடி சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

திமுக சாா்பில் செப்.20, 21-ஆம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீா்மானத்தை ஏற்பதற்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

மின் திருட்டு: ரூ.9 லட்சம் அபராதம்

சென்னை தெற்கு (எண்: 2) மின் பகிா்மான வட்டத்தில் மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மின... மேலும் பார்க்க

வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு பயணம்: டிஜிபிக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் - தமிழக அரசு உத்தரவு

புலனாய்வு அதிகாரிகள், வழக்குகளில் துப்பு துலக்குவதற்காக விமானம் மூலம் வெளிமாநிலம் செல்ல அனுமதி வழங்கும் அதிகாரம் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு வழங்கப்பட்டது. தமிழக காவல் துறையில் முக்கியமான... மேலும் பார்க்க