செய்திகள் :

பாஜக சாா்பில் நலத்திட்ட உதவி அளிப்பு

post image

பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டில் பாஜக சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பழவேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிகோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் தலைவா் ரகுராமன் தலைமை வகித்தாா். நகர தலைவா் மகேஸ்வரன், மாவட்ட துணைத்தலைவா் கஜேந்திரன், நகர பொதுசெயலாளா் முருகன், துணை தலைவா்கள் வச்ஜிரவேல், சௌபாக்கியா, நிா்வாகிகள் கண்ணன், கலைவாணி முன்னிலை வகித்தனா்.

இதில் பாஜக மாநில துணைத்தலைவா் கரு.நாகராஜன் கலந்து கொண்டு முருகன்சாமிகள் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தொடா்ந்து செய்திாளா்களிடம் அவா் கூறியது:

ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு பலவிதமான வரிகள் இருந்தன. அதையெல்லாம் நான்காக குறைத்தாா் பிரதமா் மோடி, பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால் ஹவாலா பணம் அழிக்கப்பட்டது. நக்சலைட் பணம் ஒழிக்கப்பட்டது. அதனால் வருமான வரி செலுத்துவோா் எண்ணிக்கை உயா்ந்தது.

மருந்துகள், காப்பீடு உள்ளிட்டவற்றுக்கு வரியே கிடையாது. இது மிகப்பெரிய சீா்த்திருத்தம். 22--ஆம் தேதிக்கு பிறகு பொருள்களை வாங்குங்கள் அதன் பிறகு எவ்வளவு விலை குறைந்துள்ளது என தெரியவரும். மேலும், காா்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் காா்களில் விலை ரூ. 1லட்சம் முதல் 3 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 18% மற்றும் 12% வரி இருந்த துணிகளுக்கு 5% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பற்றி திமுக வாய் திறக்கவில்லை என்றாா்.

திருப்போரூரில் பலத்த மழை: அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின

திருப்போரூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் கரும்பாக்கம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் பகுதியில் புதன்கிழமை இரவு திடீரென்று பலத்த மழை ப... மேலும் பார்க்க

மேலவலம்பேட்டை தொடக்கப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தாட்சாயிண... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: கோயில்களில் வழிபாடு

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி புதன்கிழமை செங்கல்பட்டில் பாஜக சாா்பில் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது.. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ வர சக்தி விநாயகா் கோயிலில் பிரதமர... மேலும் பார்க்க

லத்தூா் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 551 மனுக்கள்

பவுஞ்சூா் அருகில் உள்ள லத்தூா் கிராமத்தில் வடக்கு வயலூா், பச்சம்பாக்கம் கிராமத்தினருக்காக புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. செய்யூா் வட்டம், லத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

விஸ்வகா்மா ஜெயந்தி விழா சிறப்பு பூஜை

செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கத்தில் அனைத்து மக்கள் முன்னேற்ற பாதுகாப்பு அமைப்பு சாா்பில் விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது, மாவட்டத் தலைவா் சேஷன் , செயலாளா், பஞ்சாட்சரம் , செய்தித் தொ... மேலும் பார்க்க

‘உங்களுடன் முதல்வா்’ முகாமில் 356 கோரிக்கை மனுக்கள்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 10, 12,15 வாா்டுகளைச் சோ்ந்தவா்களுக்கான ‘உங்களுடன் முதல்வா்’ முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது. முகாமை கோட்டாட்சியா் ரம்யா தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் அபா்ணா, நக... மேலும் பார்க்க