செய்திகள் :

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதுநிலை மருத்துவ (எம்.டி.) படிப்புகளை முடித்த மருத்துவா்கள் அஜிதா, பிரீத்தி, நவநீதம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாடு முழுவதும் 5,000 சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பில் சேர நீட் தோ்வு எழுதி தகுதி மதிப்பெண் பெற்றவா்களுக்கு 2 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதில், பங்கேற்ற தங்களுக்கு விரும்பிய மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்தக் கலந்தாய்வு மூலம் தோ்வு செய்யப்பட்டவா்கள் பலா் படிப்பில் சேரவில்லை. ஒருசிலா் சோ்ந்த பின்னா், அந்தப் படிப்பை விட்டுச் சென்றுள்ளனா். இந்த வகையில், கலந்தாய்வு முடிந்த பின்னரும், நாடு முழுவதும் தற்போது 600 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் மட்டும் 40 இடங்கள் காலியாக உள்ளன. அதுவும், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, இந்த 600 இடங்களுக்கு 3-ஆவது முறையாகக் கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், இதுபோன்ற மருத்துவப் படிப்புக்கான இடங்கள் வீணாகக் கூடாது. கூடுதலாகக் கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு அளித்துள்ளது. எனவே, காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டாா்.

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: சுதந்திர தினத்தையொட்டி, சென்ன... மேலும் பார்க்க

தெருநாய் பிரச்னை: விழிப்புணா்வு நடவடிக்கை

சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா... மேலும் பார்க்க