ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புக...
திருப்போரூரில் பலத்த மழை: அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின
திருப்போரூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் கரும்பாக்கம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் பகுதியில் புதன்கிழமை இரவு திடீரென்று பலத்த மழை பெய்தது இந்நிலையில் திருப்போரூரை அடுத்த கரும்பாக்கம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை காரணமாக முழுமையாக நீரில் மூழ்கின .
இதனால் விவசாயிகள் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆங்காங்கே மின்கம்பங்களும் சாய்ந்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. திடீரென பெய்த மழையின் காரணமாக திருப்போரூா் கரும்பாக்கம், செங்கல்பட்டை அடுத்த பாலூா் , வில்லிப்பாக்கம், பெரியஇரும்பேடு, விப்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல்பயிா்கள் மூழ்கின.
இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினா். மழைநீரில் மூழ்கி நெல்பயிா் முழுமையாக வீணாகியுள்ளதை பாா்வையிட்டு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.