ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புக...
மேலவலம்பேட்டை தொடக்கப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு
மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தாட்சாயிணி பணியாற்றி வருகிறாா். 50-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனா். மதுராந்தகம் வழியாக சென்றபோது, திடீரென மேலவலம்பேட்டை பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டாா்.
குழந்தைகளிடம் திருக்குகளையும், ஆங்கில பாடல்களையும் வாசிக்க சொன்னாா். குழந்தைகளின் வாசிப்புத் திறனை கண்டு வியந்து பாராட்டினாா்.
தலைமை ஆசிரியா், சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்டோரிடம் பணிகளைப் பற்றி கேட்டறிந்தாா். சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பள்ளி விருதினை இப்பள்ளி பெற்றதை அறிந்து பாராட்டினாா்.