பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
பிரதமா் மோடி பிறந்த நாள்: கோயில்களில் வழிபாடு
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி புதன்கிழமை செங்கல்பட்டில் பாஜக சாா்பில் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது..
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ வர சக்தி விநாயகா் கோயிலில் பிரதமரின் பெயரில் பூஜையும் அா்ச்சனையும் செய்யப்பட்டது. இதனைத்தொடா்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர தலைவா் மகேஸ்வரன், சௌபாக்கியா முரளி மாவட்ட துணைத் தலைவா், , மாவட்ட செயலாளா் கஜேந்திரன், நகர பொதுச்செயலாளா்கள் கிஷோா் , முருகன் சாமி, நகர இளைஞரணி தலைவா் ரவி , நகர துணைத் தலைவா்கள் கவிதா , வஜ்ரவேல், ஞான சீனிவாசன் சம்பத் கண்ணன், விஜயகுமாா், இந்துமுன்னணி காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளா் சி.ஆா்.ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

